;
Athirady Tamil News

சுவிஸ் ஆரோனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆர்வத்தோடு கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள். (படங்கள்)

0

சுவிஸ் ஆரோனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆர்வத்தோடு கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள். (படங்கள்)
#############################

சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் ஆரோன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் பெருமளவான தாயக உறவுகள் கலந்து கொண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யாழ் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும் சூரிச் சபையின் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஆரோன் தனது ஒரே தங்கையான செல்வி.ஒமேகா அவர்களுடன் பிறந்த நாளினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்து வாழ் சிறுவர் சிறுமிகளோடு கேக் வெட்டி, சிற்றுண்டி வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

செல்வி.ஒமேகாவினதும் அவரது அண்ணனான செல்வன்.ஆரோன் அவர்களதும் பிறந்த நாள் நிகழ்வினை அவர்களது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் தாயக உறவுகளுடன் வாழ்வாதார உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி மண இணையரின் செல்வப் புதல்வனான ஆரோன் அவர்களது பிறந்தநாள் இன்று தாயகத்தில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் சிறுவர் சிறுமியர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு செல்வன்.ஆரோனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பாட்டிசைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

முன்னதாக எமது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வட்சப் குழுமத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த தாயக உறவான முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மாவீரன் பண்டாரவன்னியன் கிராமத்தில் வசிக்கும் இறுதி யுத்தத்தில் காணாமல்ஆக்கப்பட்டவரின் மனைவி தனது ஒரே மகளுடன் வாழ்வாதார உதவிக்காக உதவி கேட்டு பகிரப்பட்ட வீடீயோவினைப் பார்த்த தேவாலய மூப்பரான திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி தம்பதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு “குறித்த வீடியோ பயனாளிக்கு வாழ்வாதார உதவியாக தங்களது பிள்ளைகளான ஒமேகா மற்றும் ஆரோன் ஆகியோரின் எதிர்வரும் பிறந்த நாளை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவி மற்றும் மகளுக்குமான வாழ்வாதார உதவியாக கோழிகளும், கோழிக் கூட்டினையும் வழங்கி வைப்பதாக” உறுதியளித்தார்.

அந்தவகையில் செல்வி.ஒமேகா மற்றும் செல்வன்.ஆரோன் ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வுகள் யாவும் தாயக உறவுகளின் குழந்தைகளின் பங்குபற்றலோடு இனிதாக நிறைவடைந்தது.

செல்வன்.ஆரோன் அவர்களது பிறந்த நாளில் கலந்து சிறப்பித்த சிறார்கள் தங்களின் வாழ்த்துக்களை செல்வன்.ஆரோன் அவர்களுக்கு தெரிவித்ததுடன் “இடர்மிகு காலத்தில் இவ்வாறான கொண்டாட்டங்களினால் மகிழ்ச்சியாக உள்ளதாக” தெரிவித்தனர்.

ஏற்கனவே செல்வி.ஒமேகாவின் பிறந்த நாளிலும் பிறந்தநாள் பாட்டிசைத்து கேக் வெட்டி கொண்டாடியதும், ஏழை எளியோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கியதையும் நினைவுப்படுத்தி மகிழ்ச்சியாக ஆரவாரப்படுத்தினர்.

செல்வி.ஒமேகா மற்றும் செல்வன்.ஆரோன் இருவரது பிறந்த நாளையும் ஒன்றாக ஒரே நாளில் கொண்டாடும் அதேவேளை எதிர்வரும் தினங்களில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவீரன் பண்டாரவன்னியன் கிராமத்தில் கணவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போன நிலையில் மகளுடன் வசித்து வரும் குடும்பத் தலைவிக்கு வாழ்வாதார கோழிக் கூடு, கோழிகளுடன் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் செல்வி ஒமேகா மற்றும் செல்வன்.ஆரோன் இருவர்களுடைய பிறந்த நாளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன்.ஆரோன் அவர்களை பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

30.07.2021

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.