;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்..

0

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
#################################

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்.ஸ்ரான்லி ஆகிய கல்லூரிகளின் முன்னாள் அதிபராக இருந்தவரும், பின்னர் புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டை வசிப்பிடமாகக் கொண்டு, அங்கும் கல்விச்சேவை புரிந்தவருமான முன்னாள் அதிபர் அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் எண்பத்தி எட்டாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் விசேட பூசை நடைபெற்று பாலாமைக்கல் எனுமிடத்தில் மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது. அதேவேளை, அன்னாரின் பிறந்த நாள் நினைவாக வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது .

முன்னதாக வவுனியா கிராமங்களில் வசிக்கும் விசேடதேவையுடைய குடும்பங்கள் .சிறுவர்கள் அதிகமாக கொண்ட குடுப்பங்களை வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் என பலரையும் தெரிவு செய்து அவர்களின் இல்லங்களில் சென்று உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவின் கிராமங்களுக்கு சென்று உலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்கள் கலந்து கொண்டு மிகவும் பாதிக்கப ட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் பிறந்ததினத்தில் அமரத்தவமடைந்த அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை தாயக உறவுகளுடன் இணைந்து வேண்டுவதுடன், நிதிப் பங்களிப்பு வழங்கிய அவரது குடும்பத்தினருக்கும் நன்றிகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.02.2022

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.