;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு கிழக்கூரைப் பிறப்பிடமாகக் கொண்டு, புங்குடுதீவு பெருங்காட்டுப் பகுதியில் வசித்தவரும், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்.ஸ்ரான்லி ஆகிய கல்லூரிகளின் முன்னாள் அதிபராக இருந்தவரும் பின்னர் புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டை வசிப்பிடமாகக் கொண்டு, அங்கும் கல்விக்கு சேவை செய்தவருமாகிய அமரத்துவமடைந்த முன்னாள் அதிபர் அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் இன்றைய எண்பத்தி எட்டாவது பிறந்ததினம் தாய உறவுகளுடன் கொண்டாடப்பட்ட்து.

அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் எண்பத்தி எட்டாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் இன்றுகாலை விசேட பூசையுடன் பாலாமைல்க்கல் குளுமாட்டுச்சந்தி காளி கோயிலில் மதிய உணவு விருந்தும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அக்கிராம பொதுமக்கள் மற்றும் வயோதிபர், குழந்தைகள் எனப் பெருமளவில் பொதுமக்களும் கலந்து சிறப்பித்ததுடன், அமரர் இராமலிங்கம் அவர்களுக்கு தமது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டனர்.

அதேவேளை, நாளையதினம் அமரர்.இராமலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட உள்ளது.

அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்ததினத்தில் அமரத்தவமடைந்த அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை தாயக உறவுகளுடன் இணைந்து வேண்டுவதுடன், நிதிப் பங்களிப்பு வழங்கிய அவரது குடும்பத்தினருக்கும் நன்றிகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

29.01.2022

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.