;
Athirady Tamil News

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவை பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் கனடாவில் வசிக்கும் இந்திரன் என அன்புடன் அழைக்கப்படும் ஆபிரகாம்லிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் மருமகளுமான புங்குடுதீவு இறுப்பிட்டியை பூர்வீமாகக் கொண்டு கனடாவில் வசிக்கும் திருமதி.கவிதா ஆபிரகாம்லிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில்..

வவுனியா “தாஸ் கோட்டம்” பிரதேசத்தில் உள்ள “குழந்தை இயேசு முன்பள்ளி” மாணவர்களுடன், அப்பிரதேச மாணவர்கள் சிலரும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், “முன்பள்ளி ஆசிரியை” திருமதி.சசிகலா சற்குணம், “மாதர் சங்கத் தலைவி” திருமதி.கௌசலா சிவகுமார் ஆகியோருடன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு திருமதி கவிதா ஆபிரகாம்லிங்கம் அவர்களது நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் கனடாவில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி கவிதா ஆபிரகாம்லிங்கம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை, தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு தமது நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

08.05 2022.

 கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)
https://www.youtube.com/watch?v=N_ZrJi0DSPI  

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.