யாழில். நிமோனியாவால் முதியவர் உயிரிழப்பு
யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் உயிரிழந்துள்ளார்.
பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சுகயீனமடைந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.