;
Athirady Tamil News

யாழ். பல்கலையில் இளங்கலை மாணவர் ஆய்வரங்கு ஆரம்பம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு இன்று காலை ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தினராகக் கலந்து கொணடார்.

இன்று காலை இடம்பெற்ற அங்குரார்பண நிகழ்வின் திறவுரைகளை ( Keynote Speeches ) அமெரிக்காவின் ஸலிபெரி பல்கலைகழக பேராசிரியர்.எஸ்.ஐ.கீதபொன்கலன், கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி சாந்தி செகராஐசிங்கம் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும் தகைசார் பேராசிரியருமான பேராசிரியர் வ.மகேஸ்வரன், மற்றும் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் நிகழ்த்தினர்.

மாலை அமர்வில் பன்னிரு ஆய்வுத் தடங்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. இவ் ஆய்வுத் தடங்களுக்குத் துறைசார் பேராசிரியர்கள் தலைமை தாங்கவுள்ளனர்.

“சமத்துவம், சமநீதி மற்றும் அபிவிருத்திக்கான மானுடவியல் சமூக விஞ்ஞானம்” எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வரங்கில் கடந்த வருடம் கலைப் பட்டதாரிகளாக வெளியேறிய சுமார் 100 மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.