பட்டப்பகலில் கொடூர சம்பவம்… பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு
புலம்பெயர் குடும்பம் ஒன்று ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பயந்து குடியிருந்த வீட்டிற்கு தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கம்பக்கத்தினர் அச்சத்துடன்
புலம்பெயர் நபரும் அவரது மனைவியும், இரண்டு பிள்ளைகளும் நெருப்பில் சிக்கி உடல் கருகி பலியாகியுள்ளனர். குறித்த கோர சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உட்டா பகுதியில் வெள்ளிக்கிழமை குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது. இதில் யோர்தானோ வலென்சியா பினா, இவரது மனைவி ஜெய்மர் பிராவோ கில் மற்றும் 9 வயது மகன் ஜூலியானோ, 14 வயது மகள் யோர்ஜினா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், தீ விபத்து ஏற்பட்டதைக் கண்ட மேற்கு ஜோர்டான் அண்டை வீட்டார் மீட்புப் பணிகளில் குதித்தனர். சுமார் 600,000 டொலர் மதிப்பிலான அந்த குடியிருப்பு மொத்தமாக தீயில் சேதமடைந்துள்ளது.
சிறுமி யோர்ஜினா பற்றியெரியும் குடியிருப்பில் இருந்து தப்பிக்க முயன்று, முடியாமல் உடல் கருகி பலியாகியுள்ளார். ஆனால், அந்த குடும்பத்தின் வளர்ப்பு நாய் மட்டும் அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளது.
கணவரின் துன்புறுத்தலுக்கு
முதற்கட்ட விசாரணையில், திட்டமிட்டே குடியிருப்புக்கு நெருப்பு வைத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக மேற்கு ஜோர்டான் பொலிசார் தெரிவித்துள்ளனர். வெளியான தகவல்களின் அடிப்படையில் அந்தக் குடும்பம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ளது.

மேலும், ஜெய்மர் தொடர்ந்து தமது கணவரின் துன்புறுத்தலுக்கு இரையாகி வந்துள்ளார். ஆனால் அவர் ஆவணங்கள் இல்லாதவர் என்பதாலும் நாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்தாலும் காவல்துறைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் ஆவணமில்லாத புலம்பெயர் மக்களை குறிவைத்து வரும் நிலையில், நடவடிக்கைகளுக்கு பயந்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.