வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் இரவில் தீப்பிடித்து எரிந்த மரம்
வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் நேற்று (23) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபை தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக வந்து தீயை அணைத்து, வவுனியா ரயில் நிலையத்தை தீயில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரயில்வே ஊழியர்கள் குழு ஒன்று குப்பைக் குவியலுக்கு தீ வைத்தபோதே குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.