;
Athirady Tamil News

பால் மா விலை மீள அதிகரிப்பு ?

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையினை மீண்டும் அதிகரிக்க, பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

சாதாரண பால் மா விலை மட்டுமன்றி, குழந்தைகளுக்கான பால் மாவின் விலையும் பெரும் தொகையால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

ஒரு கிலோ பால் மாவின் விலையை 2545 ரூபா வரையிலும், 400 கிராம் பால் மா பெக்கட் ஒன்றின் விலையை 1020 ரூபா வரையிலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய விலையிலிருந்து ஒரு கிலோ பால் மா வின் விலை 600 ரூபாவாலும் 400 கிராம் பால் மா 230 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதுடன் குழந்தைகளுக்கான பால் மா 400 கிராம் பெக்கட் ஒன்று சுமார் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அறிய முடிகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.