;
Athirady Tamil News

’கப்பல்களில் அழைத்துவர வேண்டும்’!!

0

இந்தியாவில் இருந்து எங்களின் மக்களை அழைத்துவர குழுவொன்றை அமைத்துள்ளனர். இதனை வரவேற்கின்றோம். எனினும் அவர்கள் பல வருடங்களாக இந்தியாவில் இருந்தவர்கள். இவர்களை விமானத்தில் அழைத்து வரும் போது குறிப்பிட்ட கிலோ அளவுக்கே பொருட்களை கொண்டு வர முடியும்.

இதனால் அவர்களை கப்பல்களில் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் நேற்று (8) தெரிவித்தார்.

அவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். ஆனால் இதற்கு முன்னர் வந்தவர்களுக்கு அவ்வாறு வழங்கவில்லை. இதனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்தையும் வழங்கியே கொண்டுவர வேண்டும் என்று கூறுகின்றோம்.

இந்தியாவில் இருந்து படித்து பட்டதாரிகளாகியவர்களுக்கு இங்கு வந்த பின்னர் முறையான வேலைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். இவற்றை செய்த பின்னரே அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை நிலங்களை அபகரிக்கும் நிலைமைகள் உள்ளன. இராணுவ முகாம்கள் ஏக்கர் கணக்கில் உள்ளன. இப்போது எதற்கு அந்தளவு இடம். மக்களின் விவசாய காணிகள், உறுதி காணிகள் முகாம்களுக்குள் உள்ளன. அவற்றை விடுக்க வேண்டும்.

இப்படியிருக்கையில் வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் சீனாவின் அடிப்படை பண்ணைக்காக வழங்கப்படுகின்றது. எங்கள் மக்களின் காணிகளா உங்களின் கண்களில் தெரிகின்றது. இவ்வாறு எங்களின் மக்களின் காணிகளை அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நிறுத்த வேண்டும். இராணுவத்தினரை குறைக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் எங்களின் காணிகளை பிடிக்கக் கூடாது என்பதே எங்களின் பிரதான நோக்கமாக உள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.