;
Athirady Tamil News

முட்டை பெட்டிக்குள் 2 ரவைகள் !!

0

கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிமத்தலாவ பிரதேசத்தில் முட்டை விற்பனை செய்யும் சிறிய கடையொன்றில் முட்டைப் பெட்டியில் இரண்டு T-56 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடையின் உரிமையாளர் நேற்று (14) பிற்பகல் இந்த இரண்டு துப்பாக்கி ரவைகள் இருப்பதை அவதானித்து, கடுகன்னாவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார், அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

கடைக்கு முட்டை விநியோகம் செய்பவர் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.