இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் தலைமையிலான குழுவினருக்கும் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் அண்மையில் இந்திய துணைத் தூதரகத்தில் சந்திப்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த சந்திப்பில் இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய றோலர் மீன்பிடி காரணமாக வடக்கு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனால் கடல் வளங்கள் அழிவடைவதும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பாதிப்புகளுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும், மீனவர் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய தேவைகள் குறித்தும் பேசப்பட்டது. அதோடு சமகால அரசியல் மற்றும் சமூக விடயங்களும் கலந்துரையாடப்பட்டன என தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், கட்டைக்காடு பிரதேச சபை உறுப்பினர் அலஸ்ரன் (ரஜனி), தொண்டைமானாறு பிரதேசத்தைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் றமேஸ், சுப்பர்மட பிரதேசத்தைச் சேர்ந்த பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நிமல் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் நாகர்கோவில் பிரதேச உறுப்பினர் குறிஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.