;
Athirady Tamil News

சவுதி அரேபியா காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மாற்றம்; பனியால் மூடப்பட்ட பகுதிகள்

0

சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன.

ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமையானது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு ஆகும் .

காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மாற்றம்
பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. இது சவுதி அரேபிய குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

இந்த அசாதாரண பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை மாற்றியுள்ளது.

அதிகாலை நேரங்களில் சில இடங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்தது, இதனால் உயர்ந்த நிலங்களில் பனி குவிவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன.

குளிர் காற்றுடன் பல பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு பதிவானது. தேசிய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி, ரியாத்தின் வடக்கே உள்ள அல்-மஜ்மா மற்றும் அல்-காட் ஆகிய இடங்களிலும் பனிப்பொழிவு காணப்பட்டது – அங்கு திறந்தவெளி பகுதிகளிலும் உயரமான நிலப்பரப்பிலும் பனி படிந்துள்ளது.

இதேவேளை குடியிருப்பாளர்கள் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிளில் வசிப்பதை மற்றும் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது சவுதி அரேபியாவின் காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மற்றும் மறக்க முடியாத தருணத்தைக் குறிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.