;
Athirady Tamil News

திரிபோஷவில் நச்சுத் தன்மை: விசாரணைகள் ஆரம்பம் !!

0

நாட்டில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக வழங்குவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள திரிபோஷவை மீண்டும் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் திரிபோஷவை தயாரிக்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான திரிபோஷ உணவில் அதிகளவான நச்சுத்தன்மை வாய்ந்த மூலம் பொருள் அடங்கியிருந்தமை தெரியவந்ததை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட திரிபோஷா எனப்படும் போஷாக்கு உணவு, நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களில் மீளவும் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் திடீரென சேமித்து வைக்கப்பட்ட மூன்று சத்துகள் எதற்காக திரிபோஷவில் சேர்க்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.

​​தற்போது விநியோகிக்கப்படும் மூன்று ஊட்டங்களில் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த அஃபலரொக்சின் என்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.