;
Athirady Tamil News

வெறுப்பை பா.ஜ.க பரப்புகிறது: யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடக்கிறது- ராகுல்காந்தி..!!

0

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாத யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மகபூப்நகர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:

கடந்த 35 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்கள் உள்ளனர். அதே வேளையில் உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. இங்கே முதலமைச்சரும் (சந்திரசேகர் ராவ்) அங்கே பிரதமரும் (மோடி) பணக்காரர்களுக்கு முழு ஆதரவாக உள்ளனர். தெலுங்கானாவில் ஒரு விவசாயி எவ்வளவு கடினமாக உழைத்தாலும், உரிய வருமானத்தை பெற முடியவில்லை. ஒருபுறம் விவசாயிகளுக்கு எதிராக கறுப்புச் சட்டங்களை மோடி இயற்றிய, மறுபுறம் தெலுங்கானாவில் உங்கள் முதலமைச்சர் ஏழைகளின் நிலத்தைப் பறிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

ஜிஎஸ்டி விதித்ததால் லட்சக்கணக்கான நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஆர்எஸ் அரசு நெசவாளர்களுக்கு உதவவில்லை. எங்கள் ஆட்சி வந்தவுடன் தெலுங்கானா நெசவாளர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன். நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பா.ஜ.க பரப்புகிறது. யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடந்து வருகிறது. இதுதான் உண்மையான இந்தியா. இதுதான் நமது வரலாறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.