;
Athirady Tamil News

நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் !!

0

நாட்டில் தற்போது நிலவும் பாரிய பிரச்சினை பணப்பற்றாக்குறை எனவும், நாட்டுக்கு பணத்தையும் அந்நிய செலாவணியையும் கொண்டு வரக்கூடிய தரப்பு எங்குள்ளது என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அணியானது திறமை, ஆற்றல், நிபுனத்துவம் நிரம்பிய அணி எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த அனைவருடனும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

டொலர்களை எவ்வாறு கொண்டு வருவது, நாட்டை எவ்வாறுகட்டியெழுப்புவது, சர்வதேச உறவுகளை எவ்வாறு வலுப்படுத்துவது போன்றவற்றுக்கான கொள்கையும் வேலைத்திட்டமும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து எவ்வித சந்தேகங்களையும் கொண்டிருக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டுக்கு பெறுமானம் சேர்த்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டங்கள் மூலம் ஆற்றிய பணி தனித்துவமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் இருளை ஒழித்து வெளிச்சத்துக்கான எதிர்பார்பை உருவாக்கும் பொறுப்பும் இயலுமையும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மஹரகம தேர்தல் தொகுதி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (14) கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.