;
Athirady Tamil News

உலகின் நம்பர் வன் சொகுசு விடுதி!!

0

டுபாயில் கடந்த ஜனவரி மாதம் Atlantis the Royal என்ற புதிய சொகுசு விடுதி ஒன்று மக்கள் உபயோகத்திற்குத் திறக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கி மிகச் சொகுசாக இந்த விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் மொத்தம் 795 அறைகள் இருக்கிறது.

நீச்சல் குளம், சொகுசான பெரிய அறைகள், விதவிதமான உணவுகள், சொகுசு பிராண்டுகளின் ஷாப்பிக் கடைகள், செயற்கை நீரூற்றுகள், தங்கம் மற்றும் மார்பிளில் உருவாக்கப்பட்டுள்ள அலங்காரப்பொருட்கள் என அமைக்கப்பட்டுள்ளது.

விடுதியின் மொத்த மதிப்பு

கெர்ஸ்னர் சர்வதேச விடுதி நிறுவனத்திற்கு சொந்தமான Atlantis the Royal என்று பெயரிடப்பட்ட இந்த சொகுசு விடுதியின் மொத்த மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரு இரவுக்குத் தங்குவதற்கு 1 லட்சம் அமெரிக்க டொலர் வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்புப்படி 82 லட்சம் ரூபாய் ஆகும்.

வாடிக்கையாளர்களை உண்மையில் ராணி ராஜாவாக இந்த ஹோட்டல் உணரவைப்பதாக இதுவரை இந்த விடுதியில் தங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.