;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பொலிஸ் காவலில் இருந்தவர் தூக்கிட்டு உயிர் மாய்ப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

0

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பொலிஸ் நிலையத்தின் விசாரணை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 12.08 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு வயது (66) என்பவரே உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.