;
Athirady Tamil News

இரகசிய காதலி, குழந்தைகளுடன் ஆடம்பர பண்ணையில் வசிக்கும் புடின்!!

0

ரஷ்ய அதிபர் புடின் தனது இரகசிய காதலி மற்றும் குழந்தைகளுடன் ரூ.990 கோடி மதிப்பிலான ஆடம்பர பண்ணை வீட்டில் வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா (வயது 39) ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ரஷிய அதிபர் புடினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது. புடினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் புடின் இதுவரை வெளியிடவில்லை.

ரஷ்யாவின் புலனாய்வு செய்தி தளங்களில் ஒன்றான தி புராஜெக்ட் வெளியிட்டு உள்ள செய்தியில், மொஸ்கோ நகரில் வால்டாய் என்ற ஏரியை நோக்கியபடியான சொத்துகளை புடின் விலைக்கு வாங்கி உள்ளார்.

அதில், 2020-ம் ஆண்டு ஆடம்பர பண்ணை வீடு ஒன்றை புடின் கட்டியுள்ளார். 13 ஆயிரம் சதுர அடியில், முழுவதும் ரஷ்யாவின் கலாசார அடிப்படையிலான, மரங்களை கொண்டு மட்டுமே 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இதில், அதிபர் புடின், அவரது காதலியான அலினா கபேவா, அவர்களின் குழந்தைகள் ஆகியோருடன் அலினாவின் பெண் உறவினர்கள் சிலரும் காணப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இவற்றில் புடினின் படுக்கையறை பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு உள்ளன. அறையின் மேற்புறத்தில் தங்க இலைகள் தொங்குவது போன்றும், கண்ணாடி மேசைகளை சுற்றிலும் தங்க நாற்காலிகள் இருப்பது போன்றும் புகைப்படங்கள் வெளிவந்து உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.