;
Athirady Tamil News

இத்தாலியில் நெடுங்சாலையில் செங்குத்தாக விழுந்து விமானம்: பரபரப்பு வீடியோ காட்சி!

0

வடக்கு இத்தாலியில் செவ்வாய்க்கிழமை அன்று, ஒரு இத்தாலிய ஃப்ரீசியா RG ரக விமானம் நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுந்து, பெரும் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறிய திகிலூட்டும் தருணம் அரங்கேறியுள்ளது.

இந்த கோரமான சம்பவத்தை அங்கிருந்தவர்கள் காணொளியில் பதிவு செய்துள்ளனர்.


காணொளியில், விமானம் வான்வழி சாகசங்களை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென பிரெசியா நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுவது பதிவாகியுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.

அவர்களில மிலானைச் சேர்ந்த 75 வயது விமானி செர்ஜியோ ரவக்லியா (Sergio Ravaglia) மற்றும் அவரது பயணி, 60 வயது அன்ன மரியா டி ஸ்டெபனோ (Ann Maria De Stefano) ஆவர். இத்தாலிய செய்தி நிறுவனமான ஜியோர்னாலே டி பிரெசியா (Giornale di Brescia) பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.