பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற தகைமையை பெற்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு!! (படங்கள்)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இரண்டு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்து – பரீட்சை திணைக்களம் நடத்திய இறுதிப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் சித்தி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற தகைமையை பெற்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று 12.11.2022 காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக கலாசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
காலை அமர்வில் 132 ஆசிரியர்களும் மாலை அமர்வில் 199 ஆசிரியர்களும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”










