வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்
வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட பாமா மோகனமுரளி இன்றைய தினம் (07.01.2026) அரசாங்க அதிபர் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் இன்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.