;
Athirady Tamil News

நாராயணவனம் பராசரேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவம் 19-ந் தேதி தொடங்குகிறது!!

0

நாராயணவனம் சம்பகவல்லி உடனுறை பராசரேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 28-ந் தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான 19-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்றமும், மாலையில் சந்திரபிரபை வாகனசேவையும் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சுவாமி, தாயார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

இரவு 7 மணி முதல் 9 மணி வரை வாகன சேவைகளில் சுவாமி தரிசனம் கொடுக்கிறார். 20-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந் தேதி ஹம்ச வாகனத்திலும், 22-ந் தேதி சேஷ வாகனத்திலும், 23-ந் தேதி நந்தி வாகனத்திலும், 24-ந் தேதி கஜ வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 25-ந் தேதி ரதோத்சவம் நடக்கிறது. 26-ந் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி, தாயாருக்கு கல்யாண உற்சவமும், தொடர்ந்து அஸ்வ வாகனசேவையும் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடராஜசுவாமி உற்சவமும், மாலையில் ராவணேஸ்வர வாகனசேவையும் நடக்கிறது.

28-ந் தேதி காலை 11 மணிக்கு திரிசூலஸ்நானமும், மாலையில் கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. பிரமோற்சவத்தையொட்டி 26-ந் தேதி நடைபெறும் ஆர்ஜித கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் (இருவர்) ரூ.500 செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு உத்தரியம், ஒரு ரவிக்கை, ஒரு லட்டு, ஒரு அப்பம், அன்னபிரசாதம் ஆகியவை வழங்கப்படும் எனறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.