;
Athirady Tamil News

இஸ்ரேல் அமைச்சரின் மகன் ஹமாஸ் அமைப்புடனான மோதலில் பலி

0

இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது அந்நாட்டின் போர் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளவருமான காடி ஐசென்கோட்டின் மகன், , காஸாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

வியாழன் அன்று வடக்கு காஸாவில் நடந்த மோதலில் 25 வயதான மேஜர் கால் ஐசென்கோட் இறந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதயம் உடைந்து விட்டது
சுரங்கப்பாதை வெடித்ததில் மேஜ் ஐசென்கோட் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனதும் மனைவியினதும் ” இதயம் உடைந்து விட்டது” என்றும், கேல் ஐசென்கோட் ஒரு “உண்மையான ஹீரோ” என்றும் கூறினார்.

வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்
தனது அறிக்கையில், நெதன்யாகு மேலும் கூறியதாவது: “எங்கள் மாவீரர்கள் வீண் போகவில்லை. வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.” என தெரிவித்தார்.

பல இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் சட்டமியற்றுபவர்களும் ஐசென்கோட் குடும்பத்திற்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.