கருவள சிகிச்சை நிலையம் நேற்று அங்குரார்ப்பணம்
வைத்திய நிபுணர் அ.பாலசுப்ரமணியம் சாவித்திரிதேவி தம்பதிகளின் பங்களிப்புடன் சிவபூமி அறக்கட்டளை, யாழ்.போதனா வைத்தியசாலை, மருத்துவ பீடம் ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள பெண்கள் சுகநல நிலையத் திறப்பு விழாவானது நேற்று(21) காலை இடம்பெற்றது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி S.R.K. கனக் ஈஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு கருவள சிகிச்சை நிலையத்தையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ரிஷி தொண்டுநாதசுவாமி. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர் போராசிரியர் சி.ஸ்ரீசற்குணராசா. யாழ்.பல்கலையின் மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காலத்தின் தேவை கருதி சிவபூமி அறக்கட்டளையினால் நிறுவப்பட்டுள்ள குறித்த கருவள சிகிச்சை நிலையமானது இல. 61.1 ஆம் குறுக்குதெரு. யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




