;
Athirady Tamil News

உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் – 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

0

கீவ்,

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாவும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக கீவ், நிப்ரோ, லிவ், போல்டாவா, கார்கிவ், மயோக்லேவ், சமி, வின்னிட்சியா, செர்காசி மற்றும் இவானோ-பிரான்கிவ்ஸ் ஆகிய பகுதிகள் மீது ஒரே இரவில் சுமார் 280-க்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 260 டிரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.