;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் சொகுசு பேருந்தால் பறிபோன உயிர் ; தீவிரமாகும் விசாரணை

0

வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.