;
Athirady Tamil News

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர் கைது-விசேட அதிரடிப்படை நடவடிக்கை

0
video link-

50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை திங்கட்கிழமை (10) மாலை மேற்கொள்ளப்ட்டது.

இதன் போது கடந்த புதன்கிழமை(5) இரு சந்தேக நபர்கள் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.5 நாட்களாக தடுப்புகாவலில் வைக்கப்பட்ட மேற்படி இரு சந்தேக நபர்களிடம் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இத்தேடுதலில் 33 வயது மதிக்கத்தக்க ஒராபி பாஸா வீதியை சேர்ந்த சந்தேக நபரான வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்துடன் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவும் வீட்டில் உள்ள கட்டிலின் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மேலும் கைதான சந்தேக நபர் உட்பட 50 இலட்சத்திற்கும் பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் சான்றுப் பொருள்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.