;
Athirady Tamil News

6 ஆண்டுகளுக்கு பிறகு சீனா-வடகொரியா இடையே மீண்டும் விமான சேவை

0

பீஜிங்,

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வடகொரியா தனது எல்லைகளை மூடியது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சீனா- வடகொரியா இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.

சீனாவின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் சீனா’, பீஜிங் கில் இருந்து வடகொரிய தலைநகர் பியாங்யாங்குக்கு வரும் 30-ந்தேதி முதல் தனது சேவையைத் தொடங்க உள்ளது. முதல்கட் டமாக வாரத்திற்கு ஒருமுறை (திங்கட்கிழமை) இந்த விமானம் இயக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், தற்போது விமான சேவையும் மீண்டும் வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.