;
Athirady Tamil News

சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வில் கலாநிதி முபாரக் ஹாஜியாருக்கு பாராட்டு

0

சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நேற்று (16) மாலை சாய்ந்தமருது தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், பைத்துஸ் ஸக்காத் நிதியம், வர்த்தகர் சங்கம் மற்றும் முபாரக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்த இப்தார் நிகழ்வினை சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ. எஸ்.எம். முஜாஹித்தின் புதல்வர் சைபுல் ஷிஹாப் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இப்தார் சிறப்பு பயான் மற்றும் துஆவை அஷ்-ஷெய்க் மௌலவி ஐ.எல்.எம். ரஃபி நிகழ்த்தினார்.கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக் ஹாஜியார் பற்றிய சிறப்பு உரையினை சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமர் நிகழ்த்தினார்.

இதனுடன், சாய்ந்தமருதிலுள்ள முக்கியமான மூன்று பெரிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி திறமையாக வழிநடத்தி சமூக சேவைகளிலும் முன்னிலை வகித்து வருவதுடன், தனது அகவை 50 இல் கால்பதித்துள்ள கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக் ஹாஜியாருக்கு சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை வழங்கினர்.

அவரது சமூகப் பணிகள், சமுதாய முன்னேற்றத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புகள் மற்றும் தலைமைத் திறன் ஆகியவற்றை பாராட்டி, அவர் தொடர்ந்தும் சமூகத்திற்கும் வர்த்தகத் துறைக்கும் பல சிறப்புகளை உருவாக்க இறைவன் அருள் புரிய வேண்டுமென அனைவரும் வாழ்த்தினர்.
நிகழ்வினை சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.எம்.றிம்ஸான் தொகுத்து வழங்கினார்.

இந்த இப்தார் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல சகோதர ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் எஸ்.எம்.அறூஸ், எம்.சஹாப்தீன், அஸ்லம் மௌலானா, ஏ.டி.சத்தார், யூ.கே. காலிதீன், ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறூக் ஷிஹான், எஸ்.அஷ்ரஃப்கான் மற்றும் சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ. எஸ்.எம்.முஜாஹித், பிரதித் தலைவர் எம்.வை.அமீர், பிரதி செயலாளர் எம்.எம்.ஜபீர் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஒற்றுமையுடனும் ஆன்மிகத் தன்மையுடனும் இப்தாரை நிறைவேற்றினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.