;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

0

புத்தளத்தில் முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவதன்குளம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முந்தல் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, இளைஞன் மற்றுமொரு நபருடன் இணைந்து கோழி பண்ணையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது கால் தவறி இயந்திரம் ஒன்றின் மேல் விழுந்ததில் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.