;
Athirady Tamil News

போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத்தீ – மீட்புப் படையினரை அனுப்பி வைத்த ஸ்பெயின், இத்தாலி

0

லிஸ்பன்,

போர்ச்சுகல் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விசேயு மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு எதிர்பாராத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வரையிலான வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 8 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் போர்ச்சுகல் நாட்டுக்கு உதவும் வகையில் ஸ்பெயின், இத்தாலி ஆகிட நாடுகள் களத்தில் இறங்கியுள்ளன. இதன்படி போர்ச்சுகலின் அண்டை நாடான ஸ்பெயின் சார்பில் அவசரக்கால படை மீட்பு படையினர் போர்ச்சுகல் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், இத்தாலியும் தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவியுள்ளது. பல வீடுகளைத் தீயில் இருந்து மீட்ட ஸ்பெயின் குழுவினரின் துரிதமான செயல்பாட்டிற்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.