மெக்சிகோவில் ரயில் மீது மோதி இரண்டாக பிளந்த பேருந்து: 10 பேர் உயிரிழப்பு: 41 பேர் படுகாயம்!
மெக்சிகோவில் ரயில் மீது பேருந்து மோதியதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ரயில் மீது மோதிய பேருந்து
மெக்சிகோவில் பேருந்து மீது சரக்கு ரயில் ஒன்று மோதியதில் பேருந்து இரண்டாக பிளந்தது.
இந்த விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர், மேலும் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
மெக்சிகோ நகரின் வடமேற்கில் சுமார் 80 மைல் தூரத்தில் உள்ள அட்லாகோமுல்கோ என்ற நகரின் தொழில்துறை பகுதிக்கு அருகே உள்ள ரயில்வே கிராசிங்கில் காலை 7 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில், ஹெர்ராடுரா டி பிளாட்டா என்ற பயணிகள் பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தின் மேற்கூரை முற்றிலுமாக சிதைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளது.