;
Athirady Tamil News

பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம் ; நடு வீதியில் முடிந்த வாழ்க்கை

0

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

பொலிஸ் கான்ஸ்டபிள்
சம்பவத்தில் உயிரிழந்தவர் வரக்காபொல, மஹேனகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. டிப்பர் லொரியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.