;
Athirady Tamil News

கிரெட்டா துன்பெர்க் உட்பட நாடு கடத்திய இஸ்ரேல்: பட்ட துன்பங்களை பதிவு செய்த ஆர்வலர்கள்

0

காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் விநியோகிக்க சென்றதால் கைது செய்யப்பட்ட கிரெட்டா துன்பெர்க் மற்றும் இன்னொரு 170 சமூக ஆர்லவர்களை இஸ்ரேல் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது.

மனிதாபிமானமற்ற
இந்த 171 பேர்களையும் கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு இஸ்ரேல் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக, இஸ்ரேலியப் படைகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, ​​தங்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் நடந்துகொண்டதாக சுவிஸ் மற்றும் ஸ்பெயின் ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உட்பட 479 பேர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை நாடு கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 341 என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரெட்டா துன்பெர்க் உட்பட கைதான அனைவரின் சட்டப்பூர்வ உரிமைகளும் நிலைநிறுத்தப்பட்டதாகவும்,

இஸ்ரேலின் Ketziot சிறையில் பெண் மருத்துவ உதவியாளர் மீது ஆர்வலர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளது மட்டுமே வன்முறை சம்பவமாக பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தெற்கு இஸ்ரேலில் உள்ள ரமோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிரெட்டா துன்பெர்க் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுவரை நாடுகடத்தப்பட்டவர்கள் அனைவரும் கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், அயர்லாந்து, சுவீடன்,

கூண்டுகளில் அடைத்து
போலந்து, ஜேர்மனி, பல்கேரியா, லிதுவேனியா, ஆஸ்திரியா, லக்சம்பர்க், பின்லாந்து, டென்மார்க், ஸ்லோவாக்கியா, சுவிட்சர்லாந்து, நோர்வே, இங்கிலாந்து, செர்பியா மற்றும் அமெரிக்கா நாட்டவர்கள் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்து திரும்பிய ஆர்வலர்கள் சிலருக்கு தூக்கமின்மை, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை இருந்ததாகவும், சிலருக்கு இஸ்ரேல் பொலிசாரால் அடி, உதை மற்றும் கூண்டில் அடைக்கப்பட்ட நெருக்கடியும் ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

இதேப்போன்று ஸ்பெயின் நாட்டவர்களும் இஸ்ரேல் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதை பதிவு செய்துள்ளனர். அவர்கள் எங்களை அடித்து, தரையில் இழுத்துச் சென்று, கண்களைக் கட்டி, கைகளையும் கால்களையும் கட்டி, கூண்டுகளில் அடைத்து அவமானப்படுத்தினர் என மாட்ரிட் விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இஸ்ரேல் நிர்வாகம் மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.