;
Athirady Tamil News

பம்பலப்பிட்டியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; ஐவருக்கு நேர்ந்த கதி

0

கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறி இரண்டு கார்கள் மீது மோதி விபத்து
வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற லொறி இரண்டு கார்கள் மீது மோதியதாகவும், பின்னர் லொறி ரயில் பாதையை நோக்கிச் சென்று ரயில் தண்டவாளத்தில் நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.