காணி பிரச்சனையில் பறிபோன உயிர்; 71 வயது நபர் கைது
மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கோபிவத்தை, கோனபலை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வேத்தர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்வத்துடன் தொடர்புடைய 71 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.