;
Athirady Tamil News

கனடாவில் ஒரு அபூர்வ நிலநடுக்கம்: அபாயம் தொடருமா?

0

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தை அபூர்வ நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

ஒன்ராறியோவிலுள்ள Beaverton என்னுமிடத்தில் வாழும் சாரா, நேற்று இரவு 11.00 மணியளவில் திடீரென கர்ஜனை போன்றதொரு சத்தத்தை தான் கேட்டதாக தெரிவிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, தன் வீட்டின் அனைத்து தளங்களும் நடுங்கியதை தான் உணர்ந்ததாக தெரிவிக்கும் சாரா, தான் தொடர்ந்த அந்த நிகழ்வுகளால் நடுநடுங்கிப் போனதாக தெரிவிக்கிறார்.

விடயம் என்னவென்றால், நேற்று இரவு சுமார் 11.00 மணியளவில், தெற்கு மற்றும் மத்திய ஒன்ராறியோவை ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

ஒன்ராறியோ மக்களுக்கு நிலநடுக்கம் புதிது என்பதால், அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில், இது பொதுவாக நிலநடுக்கம் ஏற்படும் இடம் அல்ல என்று கூறும் துறைசார் நிபுணரான Marikah Adams, மேலும் நிலநடுக்கங்கள் தொடருமா என்பது தெரியவில்லை என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.