தென்மராட்சி சிவபூமி பாடசாலை – சாவகச்சேரியில் திறந்துவைப்பு
;
இதேவேளை சிவபூமி அறக்கட்டளையயின் அறப்பணிகள் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016 இல் கிளிநொச்சியிலும் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வசிப்பவர்களுமாகிய வைத்திய கலாநிதி கனகசபை கதிர்காமநாதன்- இரட்ணேஸ்வரி தம்பதிகள் மனமுவந்து வழங்கிய இல்லத்தைப் புனரமைத்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. பெரிய பரப்பளவு கொண்ட தென்மராட்சி திருநகரில் மாற்றுவலுவுடைய குழந்தைகளை மகிழ்வாய் வாழ வைக்க இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி கௌரவ விருந்தினரகளாக கேன் பற்றுநோய் காப்பக தலைவர் வைத்திய கலாநிதி கமலா வைத்தியநாதன், சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வி.ஸ்ரீபிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அதிதிகள் உரையைத் தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.