இலத்திரனியல் விசா விவகாரம் ; மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்த தீர்மானம்
இலத்திரனியல் – விசா வழங்கும் செயல்முறையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கையளிப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணைகள் இன்று பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதியரசர்கள் ஆயம் அறிவித்தது.