;
Athirady Tamil News

அமெரிக்கா தாக்கினால் செங்கடலை முடக்க ஹூதிகளுக்கு ஈரான் வழங்கிய ரகசிய உத்தரவு

0

அமெரிக்கா தனது நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடல் ஊடான எண்ணெய் போக்குவரத்துப் பாதையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு, ஏமனின் ஹூதி அமைப்பிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த இந்தத் திட்டங்கள், ஈரானியத் தலைமைத்துவத்தின் உயர்மட்ட மட்டங்களில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டம் குறித்த அறிவுறுத்தல்கள் ஏற்கனவே ஈரானின் நட்பு அமைப்பான ஹூதிப் போராளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிசக்தி விநியோகத்தில் உலகளாவிய ரீதியில் முக்கிய பங்கு வகிக்கும் செங்கடல் பகுதியில் ஏற்படக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள், உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவதானிகள் கருதுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.