;
Athirady Tamil News

யுரேனஸ் கிரகத்தின் நிலவில் திரவ நிலை நீர் கண்டுபிடிப்பு… உயிரினங்கள் வாழ வாய்ப்பு?

0

வாஷிங்டன்,

யுரேனஸ் கோளின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான மிராண்டாவில், அதன் தடிமனான பனி மேலோட்டத்திற்கு அடியில் சுமார் 100 கிலோமீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1986-ல் வாயேஜர் 2 (Voyager 2) விண்கலம் எடுத்த புகைப்படங்களை நவீன கணினி மாதிரிகள் மூலம் ஆய்வு செய்ததில் இந்த வியக்கத்தக்க தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனிடமிருந்து பல கோடி மைல் தொலைவில் இருந்தாலும், மிராண்டா நிலவில் கடல் நீர் உறைந்து போகாமல் திரவ நிலையிலேயே இருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், பூமியை தவிர்த்து விண்வெளியின் பிற பகுதிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட இடங்களின் பட்டியலில் மிராண்டாவும் இணைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.