;
Athirady Tamil News

ஈரானின் புனித நகரமான மஷாத்தில் காமேனியின் உடல் நல்லடக்கம்

0

டெஹ்ரான்,

தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், மருமகன், பேரன் உள்ளிட்டோரும் இந்த கொடூர தாக்குதலில் பலியாகினர்.

அதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை அலை, அலையாக வீசி தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைத்தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியானார்கள். தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காமேனியின் தந்தையார் நினைவிடத்துக்கு அருகிலேயே அவரை புதைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.