;
Athirady Tamil News

இளம் பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் உறவுகள்

0

மலாபே பேருந்து நிலையம் முன்பாக, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர் கார் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக மலாபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கெரகல பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த (24) வயது திருமணமாகாத பொலிஸ் அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணை
இந்த அதிகாரி கொழும்பிலிருந்து கடுவெலவை நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ​​மலபே பேருந்து நிலையத்தின் முன்பாகச் சாலையிலிருந்து விலகிச் சென்று, கடுவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்திருந்த பொலிஸ் அதிகாரி தலங்கம மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.