;
Athirady Tamil News

இவர்கள் சுறாவிற்கு இரையாவர்கள் ; ஈரானை நெருங்கும் பெரும் ஆபத்து

0

ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என ட்ரம்ப் கூறி வருகிறார். அப்படி தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரான் தெரிவித்தது.

இந்நிலையில், இஸ்லாமிய புரட்சி காவல் படை செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள செய்தியில், மோதல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகளின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என எச்சரித்து உள்ளார்.

தரைவழி தாக்குதல்
ஈரானை ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி கொண்டே, அமெரிக்க படைகளை போர் பகுதியில் இருந்து விலக்கி, மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதிகள் மற்றும் பொருளாதார மையங்களில் சென்று ஒளித்து வைத்து கொள்கிறார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. இதனை சுட்டி காட்டி அந்த செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

ட்ரம்ப் குறிப்பிட்ட தரைவழி தாக்குதல் அச்சுறுத்தல்கள் நடந்தால், பின்னர் பாரசீக வளைகுடாவில் உள்ள சுறாக்களுக்கு அமெரிக்க படை தளபதிகளும், வீரர்களும் இரையாவார்கள் என்று அதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஈரானின் அறிக்கை எச்சரித்து உள்ளது.

ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்போம் என்றும் தரை வழி தாக்குதல்களில் ஈடுபடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார் என இந்த உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவின் தலைமையகம் தொடர்ந்து கூறி வந்தது.

இதனை தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. ஈரானின் பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று நேற்று ஈரான் எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எதிரிகளின் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம் என இன்று எச்சரித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.