;
Athirady Tamil News

ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை உத்தரவு

0

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.

மேலதிகமாக, ஞானசார தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ளது.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், திறந்த பிடியாணையினை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.