;
Athirady Tamil News

12 ஆண்டுகளுக்குப் பிறகு! இராக்கில் இருந்து முழுவதுவமாக வெளியேறிய அமெரிக்க படைகள்!

0

இராக் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறும் பணிகள் நிறைவடைந்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் வெளியேறுவது குறித்து இராக் மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இராக்கின் பல்வேறு நகரங்களில் களமிறக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இராக்கின் வடக்கு மாகாணமான இர்பிலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் கடைசித் துருப்புகளும் புதன்கிழமை (செப். 30) வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

இராக்கில் ஈரானின் ஆதரவுபெற்ற கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த நிகழ்வு ஈரானின் ஆதரவுபெற்ற குழுக்கள் கொண்டாடி வரும் நிலையில், குர்தீஷ் பகுதியிலுள்ள இராக் மக்களிடையே இது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி, அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் ஷான் பார்னெல் கூறுகையில்,

“இர்பில் விமானத் தளத்திலிருந்து அமெரிக்க படைகளும், தளவாடங்களும் முறையாக வெளியேறும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நாட்டிலுள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக இராக் படைகள் தனியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என இராக் பிரதமர் அலி அல்-ஸைதி உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆட்சியைக் கவிழ்பதற்காகக் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல்முறையாக இராக்கின் மீது படையெடுத்த அமெரிக்க படைகள் 2011 ஆம் ஆண்டு வெளியேறின.

ஆனால், மூன்றாண்டுகள் கழித்து ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்ப்பதற்காக இராக் அரசு அமெரிக்க படைகளை மீண்டும் வரவழைத்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.