;
Athirady Tamil News

காரைக்காலில் இருந்து காரைநகருக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் கைது

0
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் பகுதியிலிருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்கு புறப்பட்ட கடற்தொழிலாளர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களும் , அவர்களது படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர், கடற்தொழிலாளர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்,

You might also like

Leave A Reply

Your email address will not be published.