கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த பொலிஸார் , பொதியை மீட்டு சோதனை செய்தனர்
அதற்குள் 10 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார், அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.