;
Athirady Tamil News

இலங்கையில் ஈவிரக்கமற்ற செயல் ; 10 நாய்கள் விஷம் கொடுத்து கொலை

0

அனுராதபுரம் கலாவெவ பகுதியில் நேற்று (20) 10 நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் விலங்கு நலக் கூட்டமைப்பின் (AWC) செயற்குழு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்
அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இந்த கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு” எதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத போதிலும், நாய்களின் இறப்பிற்கான முழுமையான பின்னணியைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விலங்கு வன்கொடுமை சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்களை தாமதமின்றி நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் விலங்கு உரிமைக் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை இந்த விசாரணை குறித்து தொடர்ந்து கண்காணிப்போம் என விலங்கு நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அதன் பிரதிநிதி ஒருவர்,

“இது ஒரு தனிப்பட்ட கொடூரச் செயல் மட்டுமல்ல, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒரு தீவிரமான கவலையாகும்” எனக் குறிப்பிட்டார். அதேவெளை நாய்கள் கொலப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், பொதுமக்கள் ஊகங்களை பரப்ப வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.